ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 23, 2025

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம்

ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம நேர்காணல் செய்த நான்கு பேர் மரணித்தத்தை அடுத்து அவருக்கு உயிர் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சமுதித்த சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவின் நான்கு பொலிஸ் அதிகாரிகள் தனக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

சமுதித்த சமரவிக்ரமவினால் நேர்காணல் செய்யப்பட்ட நான்கு பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை அடுத்து சமுதித்த சமரவிக்ரம தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

பாராளுமன்றத்திலும் இந்த விடயத்தை எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நீதிபதிகள் மற்றும் குறிப்பாக ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

கடும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் சமுதித சமரவிக்ரம போன்ற ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment