‘கனேமுல்ல சஞ்சீவ’ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (23) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மூவரும் கம்பஹா, உடுகம்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அதற்கமைய, இதுவரை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இக்கொலையுடன் தொடர்புடைய 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்து, குற்றம் இடம்பெறுவதற்கு முந்தையநாள் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கம்பஹா, மல்வத்த வீதி, அஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தமிந்து லக்ஷான் எனும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் தமித் அஞ்சன நயனஜித் எனும் 25 வயது இளைஞரும், உடுகம்பொல, அஸ்கிரியபொல பகுதியைச் சேர்ந்த 19 வயது சாமோத் கிம்ஹான் எனும் இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் மற்றைய பெண் சந்தேகநபரையும் முச்சக்கர வண்டிகளில் ஏற்றிச் சென்றதன் மூலம் குற்றத்திற்கு உதவியதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment