இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பஸ்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, February 21, 2025

இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பஸ்கள்

இஸ்ரேலின் டெல் அவிவின் தெற்கு புறநகர்ப் பகுதியில் 3 பஸ்களில் குண்டு வெடித்ததாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் குண்டு வெடிப்பு நடந்த நேரத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டு காலியாக இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் பொலிஸார் கூறியுள்ளதுடன், பேட் யாமில் பல்வேறு இடங்களில் பல பஸ்களில் வெடித்ததாக பல தகவல்கள் வந்துள்ளன என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சந்தேகத்திற்கிடமான கூடுதல் பொருட்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அதேசமயம் பொதுமக்கள் அந்தப் பகுதிகளைத் தவிர்த்து, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் இருந்தால் எச்சரிக்கையாக இருக்குமாறும் இஸ்ரேல் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், மற்ற 2 பஸ்களில் இருந்த வெடிக்கும் சாதனங்கள் செயலிழந்துள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.

ஐந்து குண்டுகளும் ஒரே மாதிரியானவையாக குறித்த நேரத்தில் வெடிக்கும் வகையில் காணப்பட்டன என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment