கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் ஒரு பெண் உட்பட மற்றுமொரு சந்தேகநபரையும் மஹரகம பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் தற்போது கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணேமுல்ல சஞ்சீவவைக் கொலைசெய்த பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேறத் தயாராகியிருந்தமை தெரியவந்துள்ளது.
அதற்காக, அவளை நீர்கொழும்பு பகுதிக்கு அழைத்துச் செல்ல ஒரு நபர் மஹரகம பகுதிக்கு வந்துள்ளார்.
மேலும், அந்த நபரை கைது செய்த பொலிசார், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களுகளும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு மாகாண தெற்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) கயங்க மாரப்பனவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு கொலையாளிக்கு நீதிமன்றில் உதவிய தேடப்பட்டுவரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
No comments:
Post a Comment