அரசாங்கத்தினால் மாத்திரமே தொழில் வாய்ப்பு வழங்கப்படும் : இடைதரகர்களிடம் ஒருபோதும் சிக்கிக் கொள்ள வேண்டாம் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 27, 2025

அரசாங்கத்தினால் மாத்திரமே தொழில் வாய்ப்பு வழங்கப்படும் : இடைதரகர்களிடம் ஒருபோதும் சிக்கிக் கொள்ள வேண்டாம் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

(எம்.ஆர்.எம். வசீம்)

தென் கொரியாவில் E 8 விசா குழுவில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதுடன் அந்த தொழில் வாய்ப்பு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் மாத்திரமே பெற்றுக் கொடுக்கப்படும். வேறு யாருக்கும் பணம் வழங்க வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், E 8 விசா குழுவில் தென் கொரியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. என்றாலும் இந்த தொழில் வாய்ப்பு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் மாத்திரமே பெற்றுக் கொடுக்கப்படு்ம். வேறு எந்த நபருக்கோ அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்துக்கோ E 8 விசா குழுவில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்க அனுமதி வழங்குவதில்லை.

அதனால் E 8 விசா குழுவில் கொரியாவுக்கு தொழில் வாய்ப்புக்காக செல்வதற்கு வேறு எந்த தனி நபருக்கோ முகவர் நிறுவனங்களுக்கோ பணம் வழங்குவதை தவிர்ந்து கொள்ளுமாறு கொரிய தொழில் வாய்ப்பை எதிர்பார்பார்த்திருப்பவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

தென் கொரியாவில் தொழில்களுக்கு புதிதாக இணைந்து கொண்ட விசா குழுவே E 8 விசா குழுவாகும். ஆனால் அந்த விசா குழுவை நாங்கள் அனைவருக்கும் திறந்து விடுவதில்லை. முறையாக விவசாய தொழில் அனுபவம் உள்ள தகுதியுள்ள நபர்களை மாத்திரமே நாங்கள் தொழில்களுக்கு அனுப்புகிறாேம். இதன்போது E 8 விசா குழுவுக்குரிய தொழிலுக்கு இளைஞர்களை தெரிவு செய்வது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மாத்திரமாகும்.

அதன்போது வெளி நபர்களுக்கு அல்லது வேறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு பணம் அறவிடுவதற்கு எந்த அனுமதியும் வழங்குவதில்லை. இந்த தொழில்களுக்கு நபர்களை அனுப்புவதும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மாத்திரமாகும். அதனால் இடைதரகர்களிடம் ஒருபோதும் சிக்கிக் கொள்ள வேண்டாம் எந்த நபருக்கும் பணம் வழங்க வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment