திருநங்கைகளாக மாறியவர்கள் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிறப்பால் ஆணாக இருந்து, திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் அல்லது சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகளாக பங்கேற்பதைத் தடை செய்யும் நிர்வாக உத்தரவில் நேற்று (05) கையெழுத்திட்டார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துவரும் நிலையில், ஏற்கனவே மாற்றுப் பாலினத்தவர்களுக்கான பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது திருநங்கைகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்ற முதல் நாளில் பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமானது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment