2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 01ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 252,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 43,375 ஆகும்.
அதன்படி, ரஷ்யாவிலிருந்து 34,096 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 21,730 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 16,709 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 15,050 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 12,619 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 9,563 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment