மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கட்டடத் தொகுதியில் இருந்து அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கொழும்பு - 07 பகுதியில் அமைந்துள்ள கட்டடித்தில் இருந்து அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் சில நேற்று திங்கட்கிழமை (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தெரியவருவதாவது, பாராளுமன்ற அதிகாரிகள் சிலர் இணைந்து குறித்த கட்டடத்தை சோதனையிட்டபோதே இந்த சொகுசு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த கட்டடமானது மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கைவிடப்பட்ட நிலையில் பாழடைந்து காணப்படுகின்றது.
இந்த கட்டடத்தை மீண்டும் பாராளுமன்றத்தின் கீழ் கொண்டுவரும் நோக்குடன் அதனை பாராளுமன்ற அதிகாரிகள் சிலர் இணைந்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment