பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம் : வெகுவிரைவில் நீக்குவோம் என்கிறார் பிரதி அமைச்சர் சுனில் வடகல - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 22, 2025

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம் : வெகுவிரைவில் நீக்குவோம் என்கிறார் பிரதி அமைச்சர் சுனில் வடகல

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாத தடைச் சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது. உப குழுவின் பரிந்துரைக்கமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே சட்டத்தை நிச்சயம் இரத்துச் செய்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கமைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேபோல் அரசாங்கத்தின் விருப்பத்துக்கு அமைய இந்த சட்டத்தை அமுல்படுத்த முடியாது. பொலிஸார் இந்த சட்டத்தை தவறாகவே பயன்படுத்துகின்றனர் என குறிப்பிட்டார்.

இதற்கு எழுந்து பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் முக்கியமான விடயங்களை குறிப்பிட்டார். இது தொடர்பான அமைச்சரவைப்பத்திரம் தயாரிக்கப்படுகின்றது. அது தயாரிக்கப்பட்டதும் குழுவில் ஆராய்ந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் அமைச்சரவைப்பத்திரம் சமர்பிக்கப்படும். அது தொடர்பான விபரங்களை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் உறுதிப்படுத்துவோம். இதற்கமைய பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என்பதுடன் பயங்காரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்றார்.

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் தனது உரையில் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல, பயங்கரவாத தடைச் சட்டம் பற்றி பேசப்படுகிறது. ஏனைய கட்சிகளை காட்டிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தால் நாங்கள்தான் பாரதூரமாக பாதிக்கப்பட்டோம். ஆகவே இதன் பாரதூரம் எமக்கு நன்கு தெரியும்.

பயங்கரவாத தடைச் சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். . இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது. உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆகவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இச்சட்டத்தை நீக்குவோம் என்றார்.

No comments:

Post a Comment