கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மீட்கப்பட்டார் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 12, 2025

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மீட்கப்பட்டார்

பாறுக் ஷிஹான்

கண்டி மாவட்டம், கெலிஓயா, அம்பரப்பொல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார் .
இச்சம்பவம் இன்று (13) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், தற்போது அம்பாறை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து மாணவி உட்பட அவரைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டு அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பாரை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்

கெலிஓயா, அம்பரப்பொல பகுதியில் நடந்துவந்து கொண்டிருந்த இரண்டு மாணவிகளில் ஒரு மாணவி கடத்தப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பிலான வீடியோ கடந்த சனிக்கிழமை (11) அன்று பகிரப்பட்டுள்ளது. அதிலொரு மாணவி தப்பிச் சென்றுள்ளார். 

எனினும், வாகனத்துக்குள் இழுத்துப்போடப்பட்ட மாணவியை காப்பாற்றும் முயற்சியில் இவ்வீதியில் சென்றவர் முயற்சித்துள்ளமை அக்காட்சிகளில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment