முன்னெடுக்கப்பட்டுள்ள எந்தவொரு விசாரணையிலும் அரசியல் தலையீடு காணப்படவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
பல விசாரணை கோப்புகள் மீதான விசாரணைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சில கோப்புகளின் விசாரணைகளில் சிறியளவிலான தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், தாமதமடைந்துள்ள கோப்புகளின் விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழு செயற்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலருக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிட்ட சட்டமா அதிபர் திணைக்களம், குறித்த அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக விடயங்கள் வௌிவருவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment