கைதானார் அர்ச்சுனா எம்.பி ! நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 29, 2025

கைதானார் அர்ச்சுனா எம்.பி ! நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நகர சபை வளாகத்திற்குள் வைத்து இன்று (29) பிற்பகல் அர்ச்சுனா எம்.பி அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் அண்மையில் தொடுக்கப்பட்ட வழக்கினை காரணம் காட்டியே பொலிஸார் அவரை கைது செய்திருப்பதாக தெரிய வருகிறது.

சாவகச்சேரி நகரசபை அதிகாரிகளுடன் வர்த்தக நிலைய குத்தகை தொடர்பாக கலந்துரையாட வந்த நிலையிலேயே அவர் அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.

அர்ச்சுனாவை அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி விசேட நிருபர்

No comments:

Post a Comment