தேர்தல் செலவறிக்கை சமர்ப்பிக்காதோருக்கு வழக்கு தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 28, 2025

தேர்தல் செலவறிக்கை சமர்ப்பிக்காதோருக்கு வழக்கு தாக்கல்

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமது செலவறிக்கையினை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்காதவர்களுக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தில் திருகோணமலை குற்றப் புலனாய்வு பணியகத்தினால் செவ்வாய்க்கிழமை (28) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த 2024 பொதுத் தேர்தலில் திருகோணமலையில் போட்டியிட்ட அபேட்சகர்களில் 17 பேருக்கும் கட்சி செயாலாளர் சுயேட்ச்சைக் ழுக்களின் தலைவர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

திருகோணமலை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.நஜீம் தலைமையில் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment