தட்டுப்பாடின்றி வழங்க மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுங்கள் - சுகாதார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 18, 2025

தட்டுப்பாடின்றி வழங்க மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுங்கள் - சுகாதார அமைச்சர்

(எம்.மனோசித்ரா)

நாட்டுக்கு தொடர்ச்சியாக தட்டுப்பாடுகள் இன்றி மருந்துகளை வழங்குவதற்காக அடுத்த இரண்டு வருடங்களில் உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பல்வேறு காரணிகளால் நாட்டு மக்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குவது சவாலாக மாறியுள்ளது. மருந்து வழங்குனர் பற்றாக்குறை, மற்றும் உலகளாவிய பிரச்சினை விநியோக வலையமைப்பின் சீர்குலைவு போன்ற காரணங்களால் அரசாங்க மருத்துவமனை அமைப்பினால் தொடர்ந்து மருந்து விநியோகம் செய்ய முடியவில்லை என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

மருந்து உற்பத்தி திறனை அதிகரிக்க தேவையான மூலப் பொருட்களை உடனடியாக இறக்குமதி செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்த அமைச்சர், அதை சரி செய்து உற்பத்தி திறனை அதிகரிக்க தேவையான திட்டங்களை தயாரிப்பது குறித்து அதிகாரிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு நகரத்தையும் உள்ளடக்கும் வகையில் அரச மருந்தகச் சங்கிலியின் கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடையான இந்த நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையை அடைவதற்காக, நிறுவனத்தின் பணிகளை மிகவும் முறையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடைமுறைப்படுத்துவதற்காக, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் அமைச்சர் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

போதைப் பொருள் உற்பத்தி, மூலப் பொருட்கள், மருந்து ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் போதைப் பொருள் விநியோக நிகழ்ச்சித்திட்டம், ஆய்வக வசதிகள், மற்றும் சந்தைப்படுத்தல், அத்துடன் நிறுவனத்தின் மனித வள மேம்பாடு ஆகியவற்றில் அமைச்சர் கவனம் செலுத்தினார்.

No comments:

Post a Comment