(எம்.மனோசித்ரா)
துறைமுகத்தில் கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்படும் தாமதங்கள் இந்த வாரத்திற்குள் தீர்க்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக கொள்கலன் லொறி சாரதிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கொள்கலன் லொறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள, கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்படும் தாமதங்கள் கொள்கலன் லொறி சாரதிகளை கடுமையாக சிரமப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாதது உட்பட லொறி சாரதிகள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த வாரத்திற்குள் இந்த தாமதங்கள் தீர்க்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
தொழிற்சங்க நடவடிக்கை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகள் இரண்டையும் பாதிக்கும். சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு இல்லாததே தாமதத்திற்கு வழிவகுத்துள்ளன.
சுங்கத்துறைக்கு அப்பால் அதனுடன் தொடர்புடைய பிற அரச நிறுவனங்களும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும். பிரச்சினையை தீர்க்க பாதுகாப்புப் படையினரை அரசாங்கம் கடமைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment