ரோஹிங்கியா மக்களை இலங்கை பாதுகாப்பாக நடத்தும் என்று நம்புகிறோம் : ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் நம்பிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2025

ரோஹிங்கியா மக்களை இலங்கை பாதுகாப்பாக நடத்தும் என்று நம்புகிறோம் : ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் நம்பிக்கை

(லியோ நிரோஷ தர்ஷன்)

அகதிகளாக வந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் என்று நம்புகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தொடர்பான முக்கியஸ்தர்கள் குழு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ப்ரான்ச் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ப்ரான்ச் மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர ஆகியோருக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாக்கும் விதம் குறித்து பாராட்டுக்களை தெரிவித்தார் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ப்ரான்ச்.
அந்த மக்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பாமல் பாதுகாப்பான ஒரு நாட்டில் தங்க வைப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை அவதானம் செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.

அதுவரை ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலங்கை பாதுகாப்புடன் நடத்தும் என்று நம்புகின்றோம். ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தொடர்பான முக்கியஸ்தர்கள் குழு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி கரை ஒதுங்கிய சுமார் 35 சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய் உட்பட 100 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகளை அந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கி மீட்டு கரைக்குக் கொண்டுவந்திருந்தனர்.

அவர்கள் தற்போது முல்லைத்தீவு விமானப்படை முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment