திருகோணமலையில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு ! - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2025

திருகோணமலையில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு !

திருகோணமலை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனின் சடலம் இன்று (01) காலை மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர் கடற்பகுதியில் வியாழக்கிழமை (30) நான்கு நண்பர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்கி அனைவரும் அள்ளுண்டு சென்றனர்.

இதில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போயுள்ள இளைஞனை தேடும் பணியை வியாழக்கிழமை முதல் முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த இளைஞனின் சடலம் கடலில் மிதந்த நிலையில் இன்று (01) காலை மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இளைஞன் திருகோணமலை - சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 20 வயதானவர் ஆவார்.

மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment