இலங்கையில் சிறுவர் உயிர்மாய்ப்புகள் அதிகரிப்பு ! சமூக ஊடகங்கள் பாவனையே காரணம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2025

இலங்கையில் சிறுவர் உயிர்மாய்ப்புகள் அதிகரிப்பு ! சமூக ஊடகங்கள் பாவனையே காரணம்

சமூக ஊடகங்கள் பாவனை சிறுவர் உயிர்மாய்ப்புகள் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL) தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட சிறுவர் உயிர்மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரியின் வைத்திய கலாநிதி கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 133 சிறுவர்கள் உயிர்மாய்ப்பு செய்துகொண்டுள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின்படி கடந்த ஆண்டில் 270 உயிர்மாய்ப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

உயிர்மாய்ப்புக்களை தடுக்க எடுக்க வேண்டிய முதலாவது நடவடிக்கை சமூக ஊடகங்களை ஏதேனும் ஒரு வழியில் தடை செய்வதாகும்.

ஒரு நாடாக என்ன செய்ய முடியும் என்பது பற்றிய தகவல்களை நாங்கள் சேகரித்துள்ளோம், மேலும் ஓரிரு வாரங்களில் மேலதிக விவரங்களை வெளியிடுவோம் என்று நம்புகிறோம்.

சமூக ஊடகங்கள் சிறுவர்களுக்கு சாதகமாக மற்றும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் அதேவேளையில், அதன் பயன்பாட்டை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment