அரிசி விற்றால் ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணத்துடன், சட்ட நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, January 26, 2025

அரிசி விற்றால் ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணத்துடன், சட்ட நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை எச்சரிக்கை

(இராஜதுரை ஹஷான்)

கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணத்துடன், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

நுகர்வோர் அதிகார சபையின் சுற்றிவளைப்புக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, ஒரு சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நிர்ணய விலைக்கு மாறாகவே பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் முறைப்பாடளித்துள்ளனர்.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலைக்கு மாறாக அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணத்துடன் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பகுதிகளில் பகல் வேளையில் ஒரு விலைக்கும், இரவு வேளைகளில் பிறிதொரு விலைக்கும் அரிசி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் முறைப்பாடளித்துள்ளார்கள்.

ஆகவே 24 மணித்தியாலமும் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment