பெளத்தாலோக வெசாக் வலயம் : வெற்றிகரமாக நடத்த கலந்துரையாடல் : அரச ஒத்துழைப்பு, முன்னேற்பாடு குறித்து ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2025

பெளத்தாலோக வெசாக் வலயம் : வெற்றிகரமாக நடத்த கலந்துரையாடல் : அரச ஒத்துழைப்பு, முன்னேற்பாடு குறித்து ஆராய்வு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தாலோக வெசாக் குழு உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முறை வெசாக் நிகழ்வை முன்னிட்டு 24 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் பௌத்தாலோக வெசாக் வலயத்தை விமர்சையாக நடத்துவதற்கு அரச அனுசரணையை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் அதற்கு அமைவான முன்னேற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதன்படி, பௌத்தாலோக வெசாக் வலயத்தை வெற்றிகரமாக நடத்த ஜனாதிபதி அலுவலகம் உட்பட அரச நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமான தலையீடு செய்யப்படும் என ஜனாதிபதி செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

பௌத்தாலோக வெசாக் வலயக் குழுவின் தலைவர் டீ.உபுல் ரூபசிங்க, செயலாளர் எம்.வீ.பீ.தென்னகோன், பொருளாளர் சீ.கே.கமகே, இணைப்பாளர் ஒஷான் புத்திக்க எதிரிசூரிய, அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தின் உப தலைவர் வைத்தியர் ராணி பெர்னாண்டோ ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment