டிப்பர் வாகனத்தை மடக்கிப் பிடித்த பாராளுமன்ற உறுப்பினர் - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2025

டிப்பர் வாகனத்தை மடக்கிப் பிடித்த பாராளுமன்ற உறுப்பினர்

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சீமெந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் சுண்ணக் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அண்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்திலிருந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யும் வர்த்தகருக்குச் சொந்தமான டிப்பர் வாகனம்  மூலமாக சட்டவிரோதமான முறையில் சுண்ணக் கற்கள் அகழ்ந்து செல்வதாகப் பிரதேச மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமாரனுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.

அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது வியாழக்கிழமை (02) இரவு 10.15 மணியளவில் நுணாவில் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டபோது அனுமதிப்பத்திரம் இன்றி சுண்ணக் கற்களை ஏற்றிச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குறித்த டிப்பர் வாகனத்தை மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment