உலகின் தலைசிறந்த பயண இடங்களுள் இலங்கைக்கு புதிய அங்கீகாரம் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 18, 2025

உலகின் தலைசிறந்த பயண இடங்களுள் இலங்கைக்கு புதிய அங்கீகாரம்

2025 ஆம் ஆண்டில் சிறந்த 25 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த சுற்றுலா இடங்களுக்கான அறிமுக வழிகாட்டியான “BBC Travel” இதனை அறிவித்துள்ளது.

உலகின்  சிறந்த சுற்றுலா இடங்கள் என “BBC Travel” வெளியிட்டுள்ள 25 இடங்களைக் கொண்ட பட்டியலில் இலங்கை 9வது இடத்தில் உள்ளது.

BBC Travel ஊடகவியலாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு (United Nations World Travel Organization,), சர்வதேச நிலையான சுற்றுலாதுறை (Sustainable Travel International) மற்றும் உலக பயணம் மற்றும் சுற்றுலா சபை (World Travel & Tourism Council-WTTC) போன்ற முன்னணி நிலையான பயண அமைப்புகளின் ஆலோசனையின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

படர்ந்த மலை உச்சியிலுள்ள தேயிலை தோட்டங்கள், சுற்றித்திரியும் காட்டு யானைகள், வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் மற்றும் நீர் சறுக்கல் போன்ற அம்சங்களுடன் பார்வையாளர்களுக்கு நம்பமுடியாத பயண அனுபவங்களை வழங்கும்  புகழ்பெற்ற  நாடாக இலங்கை விழங்குவதாக பயண வழிகாட்டியில் விவரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை வங்குரோத்து அடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது புதிய ஜனாதிபதி கொரோனா வைரஸ் பரவல் மற்றும் உள்நாட்டு நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட நாட்டை மீள் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்" என்று பிபிசி குறிப்பிட்டுள்ளது.

கண்டியில் முதலாவது ஏழு நட்சத்திர ஹோட்டல் நிர்மாணம், கொழும்பில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பெரிய நட்சத்திர ஹோட்டல் திறப்பு, இலங்கையை தூர கிழக்கு நாடுகளான ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவுடன் இணைக்கும் புதிய விமான சேவையை ஆகிய இலங்கையின் அவிவிருத்தி வேலை திட்டங்கள் இந்த வழிகாட்டி முன்னிலைப்படுத்தியது

அத்துடன், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கிராமப்புற கிராமங்கள் வழியாக மலையேறுபவர்களை அழைத்துச் செல்லும் 300 கிலோ மீற்றர் Pekoe Trail  நடைபாதை ஆகியவை நிலையான சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நாட்டின் புதிய முயற்சிகள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்ட மற்ற இடங்களாகும் என குறிப்பிட்டுள்ளது.

குளிரை தேடும் சுற்றுலா பயணிகள்  மலைப்பாங்கான இடங்களுக்கு செல்ல பிரபலமான ரயில் பயணத்தை முன்னெடுக்கலாம்.  புதிய தலைமுறை ஐந்தாம் நூற்றாண்டின் பானமான அரக்கு உட்பட உள்ளூர் மதுபானங்களை சுவைக்க கொழும்பு மற்றும் காலிக்கு செல்லலாம்"  அத்துடன், வாகன உரிமையாளருக்கு நேரடியாக பணம் செலுத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகள் சுயமாக முச்சக்கர வண்டிகளில் இலங்கை தீவை சுற்றி வரலாம் என  தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இலங்கைக்கு, உலக பயண மற்றும் சுற்றுலா சபையிடமிருந்து (World Travel & Tourism Council-WTTC) பாதுகாப்பான பயண முத்திரை (Safe Travels Stamp) வழங்கப்பட்டுள்ளது.

2025 ல் சுற்றுலா செல்ல சிறந்த  25 இடங்கள்

01. டொமினிக்கா

02. நவோஷிமா, ஜப்பான்

03. டோலமைட்ஸ், இத்தாலி

04. கிரீன்லாந்து

05. வேல்ஸ்

06. வெஸ்டர்ன் நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர், கனடா

07. டியூசன், அரிசோனா, அமெரிக்கா

08. மேற்கு ஆஸ்திரேலியா

09. இலங்கை

10. பனாமா

11. ரிஃப் மலைகள், மொராக்கோ

12. பிராட்ஃபோர்ட், இங்கிலாந்து

13. ஜோர்டான்

14. ஹா பள்ளத்தாக்கு, பூட்டான்

15. ஹவாய், அமெரிக்கா

16. உஸ்பெகிஸ்தான்

17. ஹைடா குவாய், கனடா

18. எமரால்டு கோஸ்ட், நிகரகுவா

19. ஐல் ஆஃப் மேன்

20. பாகிஸ்தானின் கில்கி-பால்டிஸ்தான் பகுதி

21. அசோர்ஸ்

22. கன்சாஸ் சிட்டி, மிசோரி, அமெரிக்கா

23.பொலிவியா

24. போட்ஸ்வானா

25. ஒஸ்லோ, நோர்வே

No comments:

Post a Comment