உடைந்து விழுந்த ஹோட்டல் அறையின் அடித்தள பலகைகள் : காயமடைந்த 6 மாணவர்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 18, 2025

உடைந்து விழுந்த ஹோட்டல் அறையின் அடித்தள பலகைகள் : காயமடைந்த 6 மாணவர்கள்

கினிகத்தேன நகரிலுள்ள உணவகமொன்றில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த அறையொன்று இன்று (18) உடைந்து விழுந்ததில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

தரம் 10 இல் கல்வி பயிலும் 6 மாணவர்கள், கினிகத்தேன நகருக்கு பிரத்தியேக வகுப்புக்கு வந்திருந்த நிலையில், குறித்த ஹோட்டலுக்கு சென்று உணவருந்தியுள்ளனர்.

ஹோட்டலில் இருந்த அறையொன்றின் அடிதளத்தில் பலகைகள் உடைந்ததையடுத்து மாணவர்கள் கீழே விழுந்துள்ளனர். சுமார் 15 அடிவரை பள்ளத்துக்கு மாணவர்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனால் காயமடைந்த மாணவர்கள் பிரதேசவாசிகளால் கினிகத்தேன வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

குறித்த உணவகம் பாதுகாப்பற்ற முறையிலும், சுகாதார பாதுகாப்பு இன்றியும் இயங்கி வந்துள்ளது என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹட்டன்  நிருபர்

No comments:

Post a Comment