வழித்தட எண் 187 (கொட்டுவ - கட்டுநாயக்க) இல் இயங்கும் சொகுசு பஸ்கள் இன்று (10) முதல் விமானப் பயணிகளின் வசதிக்காக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வர வழங்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் கோட்டை - கட்டுநாயக்க பஸ்கள், விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன.
எனினும், விமான நிலையத்தில் தரித்து நின்று இந்த பஸ் சேவையை இயக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment