ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது அண்டை வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை இன்றையதினம் (10) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதய வீரதுங்க தமது அயலவருக்கு தாக்கும் வீடியோ காட்சியொன்றும் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதில் நபர் ஒருவரின் முகத்திலிருந்து சிறிதளவில் இரத்தம் வெளிவருவதும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment