பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 21, 2025

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று திங்கட்கிழமை (20) மாலை 04.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை (21) மாலை 04.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 

1. பதுளை  மாவட்டம் 
பாததும்பர,பன்வில, மெததும்பர

2. குருணாகல்  மாவட்டம் 
ரிதிகம

3. மாத்தளை   மாவட்டம் 
லக்கலை, பல்லேகம, நாவுல, பல்லேபொல

இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 

1. கண்டி  மாவட்டம் 
உடுதும்பர, தொலுவ

2. மாத்தளை   மாவட்டம் 
இரத்தோட்டை, வில்கமுவ , யட்டவத்தை, உக்குவளை

No comments:

Post a Comment