விரைவில் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை அனுமதிக்கும் ஒப்பந்தம் : இத்தாலியில் தொழில் விசா பெறுவதில் இருக்கும் பிரச்சினையை தீர்க்கவும் - இத்தாலி தூதுவருடன் கலந்துரையாடிய அமைச்சர் விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Friday, January 31, 2025

விரைவில் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை அனுமதிக்கும் ஒப்பந்தம் : இத்தாலியில் தொழில் விசா பெறுவதில் இருக்கும் பிரச்சினையை தீர்க்கவும் - இத்தாலி தூதுவருடன் கலந்துரையாடிய அமைச்சர் விஜித ஹேரத்

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் அனுமதிக்கும் ஒப்பந்தத்தை விரைவில் கைச்சாத்திடவும் இத்தாலியில் தொழில் விசா பிரச்சினையை தீர்ப்பதற்கும் அமைச்சர் விஜித்த ஹேரத் இத்தாலி தூதுவருடன் கலந்துரையாடியுள்ளார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் இலங்கைக்கான இத்தாலி நாட்டு தூதுதவர் டெமியானோ பிரென்கோவக் ஆகியோருக்கிடையில் வியாழக்கிழமை (30) வெளிவிவகார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது இத்தாலியில் தொழில் விசா பெற்றுக் கொள்வதை இடை நிறுத்தியுள்ளமை தொடர்பில் அமைச்சர் கேட்டறிந்தபோது, இத்தாலி அரசாங்கம் பல நாடுகளுக்கு தொழில் விசா வழங்குவது தொடர்பில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தியுதுள்ளடன் அது தற்காலிக நடவடிக்கையாகும் என தூதுவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையர்களுக்கு மீண்டும் தொழில் விசா வழங்குவதை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்தபோது, அது தொடர்பில் இத்தாலி அரசாங்கத்துக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு தூதுவர் இணக்கம் தெரிவித்தார்.

அதேபோன்று அமைச்சரின் வேண்டுகோளுக்கமைய இலங்கை வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் அனுமதிக்கும் ஒப்பந்ததத்தை தாமதிக்காமல் நிரைவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தூதுவர் தெரிவித்தார்.

தற்போது தாமதமாகியுள்ள குறித்த ஒப்பந்தம் இத்தாலி போக்குவரத்து அமைச்சினால் ஆராய்ந்து பார்த்து வருவதாகவும் அதனை மிக விரைவில் நிறைவு செய்வதற்கு அனைத்து ஒத்துழைப்புகளை வழங்குவதற்கும் தூதுவர் இணக்கம் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இத்தாலி அரசாங்கங்களுக்கிடையில் இரு தரப்பு ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திட்டுள்ளதுடன் இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சுகளுக்கிடையில் அரசியல் ஆலாேசனை மட்டத்திலான கலந்துரையாடல்கள் நிறைவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மிக விரைவில் கைச்சாத்திடவும் இந்த கலந்துரையாடலின்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக இலங்கை மற்றும் இத்தாலி அரசாங்கங்களுக்கிடையில் இராஜதந்திர தொடர்புகள் 1952 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இத்தாலி இலங்கை ஏற்றுமதி சந்தைகளுக்கு மத்தியில் 5ஆவது இடத்தை வெற்றி கெண்டுள்ளதாகவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தற்போது இத்தாலியில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாகவும் 2024 இல் இத்தாலி சுற்றுலா பயணிகள் 38709 பேர் வரை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இத்தாலி குடியரசுகளுக்கிடையில் இருந்துவரும் பொருளாதாரம் கலாசாரம் மற்றம் சுற்றுலாதுறை தொடர்புகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு தூதுவரின் ஒத்துழைப்பை கோரிய அமைச்சர், இத்தாலி அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் வழங்கிய ஒத்துழைப்பையும் பாராட்டினார்.

No comments:

Post a Comment