புகையிரத டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக மற்றுமொருவர் கண்டி வலய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு நேற்று (26) கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து E - டிக்கெட்டுக்கள் இரண்டும், கையடக்க தொலைபேசிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
ஏற்கனவே, இச்சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment