பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் : இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 7, 2025

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் : இருவர் கைது

ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் இருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை மிஹிந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மிஹிந்தலை ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு வெளியே நேற்று 06ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 27, 30 வயதுடைய மிஹிந்தலை நகரை வசிப்பிடமாக கொண்ட இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, கடந்த 05ஆம் திகதி இரவு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இடம்பெற்ற வருட இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு விடுதிக்கு சென்றுகொண்டிருக்கும்போது இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை மேலும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(அநுராதபுரம் நிருபர்)

No comments:

Post a Comment