மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
நேற்றையதினம் (28) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையின் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உள்நாட்டு ரீதியிலும் உலகளாவிய ரீதியிலுமான தற்போது நிலவுகின்றதும் எதிர்பார்க்கப்படுகின்றதுமான பேரண்டப் பொருளாதார மேம்பாடுகளைக் கருத்திற் கொண்டதன் அடிப்படையில், சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.
பணவீக்கமானது இலக்காகக் கொள்ளப்பட்ட 5% இனை நோக்கி அடைவது நிச்சயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலினை அடைவதனை ஆதரவளிக்கின்ற விதத்திலான நடுத்தர கால நோக்கொன்றுடன் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக எதிர்பார்க்கப்பட்டவாறு, தற்போதைய பணச்சுருக்க (விலைகளின் வீழ்ச்சி) காலப்பகுதியானது நிர்வாக ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட வலுசக்தி (எரிபொருள், மின்சாரம்) விலைக் குறைப்புக்களின் பிரதிபலன் என சபையினால் அவதானிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கமானது எதிர்வரும் சில மாதங்களுக்கு நிலவும் என்பதோடு, அதன் பின்னர் 2025 இரண்டாம் அரையாண்டில் எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தினை நோக்கிச் பயணிக்க ஆரம்பிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment