SLTB தலைவர் ரமல் சிறிவர்தன திடீர் இராஜினாமா ! ஒரு மாதத்திற்குள் இருவர் பதவி விலகல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 29, 2025

SLTB தலைவர் ரமல் சிறிவர்தன திடீர் இராஜினாமா ! ஒரு மாதத்திற்குள் இருவர் பதவி விலகல்

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இராஜினாமாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை அரச நிறுவனமொன்றில் தற்போதைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குள் இராஜினாமா செய்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

முன்னதாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவர் செனேஷ் திஸாநாயக்கவும் தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் தற்போது SLTB தலைவரும் இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment