நாளாந்தம் மதுபானத்திற்கு 690 மில்லியன் ரூபாவை செலவு செய்யும் இலங்கையர்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2025

நாளாந்தம் மதுபானத்திற்கு 690 மில்லியன் ரூபாவை செலவு செய்யும் இலங்கையர்கள்

நாட்டில் அரக்கு மற்றும் பியர் ஆகிய மதுபானங்களுக்கு நாளாந்தம் 690 மில்லியன் ரூபாவை மக்கள் செலவு செய்கின்றனர் என மது மற்றும் போதைப் பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

83 சதவீதமான தடுக்கக்கூடிய இறப்புகள் இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் போன்ற தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. மது மற்றும் புகையிலை பழக்கங்கங்களே தொற்றா நோய்களுக்கு முக்கிய காரணிகளாகும்.

2022 ஆம் ஆண்டில், மதுபானம் ஊடாக வரி வருமானம் 165.2 பில்லியன் ரூபாய் ஆகும். மதுவால் ஏற்பட்ட இழப்பு 237 பில்லியன் ரூபாய் ஆகும் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இலங்கையில் நாளாந்தம் 40 முதல் 50 பேர் மது பழக்கத்தால் மரணமடைகின்றனர். இதனால் வருடாந்தம் 15,000 - 20,000 பேர் மரணமடைகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்பதால் பல சிறுவர்கள் தந்தையை இழக்கின்றார்கள்.

மது அருந்துவதற்கான தற்போதைய போக்கு, பெரும்பாலான நிகழ்வுகள் பெரிய கூட்டங்களின்போது நிகழ்கின்றன என்பதைக் காட்டுகிறது. இதுவே மது பழக்கத்தை ஆரம்பிக்க முக்கிய பங்கு வகிப்பதோடு, செல்வாக்கு செலுத்துக்கின்றது.

மது மற்றும் போதைப் பொருள் தகவல் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி செராம் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டு நாளாந்தம் புகையிலை பயன்பாட்டுக்கு 510 மில்லியன் ரூபாவை மக்கள் செலவு செய்துள்ளார்கள்.

2019 ஆம் ஆண்டு புகையிலை ஊடாக வரி வருமானம் 92.9 பில்லியன் ரூபாய் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இலங்கை அரசாங்கம் வருடாந்தம் புகையிலை நுகர்வு தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் பொருளாதாரச் செலவுகளுக்கு 214 பில்லியன் ரூபாவை செலவு செய்கிறது.

இலங்கையில் மது அருந்தும் பழக்கம் குறித்து மது மற்றும் போதைப் பொருள் தகவல் மையம் நடத்திய பொதுக் கருத்துக் கணிப்பில் பெரும்பாலான வயது வந்தவர்கள் மதுபானங்களின் விலைகளை 73 சதவீதாமாக அதிகரிக்கவும், 75 சதவீதாமாக மது வரி விதிக்கவும் ஆதரவாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment