இலங்கையில் வருடத்திற்கு 1,800 தொழுநோயாளிகள் : 12 சதவீதமானவர்கள் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2025

இலங்கையில் வருடத்திற்கு 1,800 தொழுநோயாளிகள் : 12 சதவீதமானவர்கள் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்

நாட்டில் ஒரு வருடத்தில் 1,800 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். அதில் 12 சதவீதமானவர்கள் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களாவர். தொழுநோய் பற்றீரியாவால் ஏற்படுவதோடு, சுமார் 6 சதவீதமானவர்களுக்கு உடலில் அறிகுறிகள் தெரியக்கூடிய வகையில் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நோய் பரவாமல் தடுக்க, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் பொது விழிப்புணர்வு அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தொழுநோய்க்கு ஒரு குறிப்பிட்ட சிகிச்சை இருந்தாலும், நோயைப் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான புரிதல்கள் காரணமாக பல நோயாளிகள் சமூக பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.

தொழுநோய் எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஆலோசகர் சமூக வைத்தியர் திலினி விஜேசேகர தெரிவிக்கையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் கருத்துப்படி, ஒரு நபர் சிகிச்சை பெறாத தொழுநோயாளிகளிடம் வாரத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக மூன்று மாதங்களுக்கு தொடர்பில் இருக்கும்போது நோய் உண்டாகும்.

இலங்கையில் தொழுநோயாளிகள் தோல் நோய் சிகிச்சை நிலையங்களில் பல வகையான சிகிச்சைகளைப் பெறுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

10 முதல் 12 சதவீதமான நோயாளிகள் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பெரும்பாலான தொழுநோயாளிகள் 25 முதல் 45 வயதிற்குட்பட்ட ஆண்களிடையே பதிவாகியுள்ளனர்.

கணிசமான எண்ணிக்கையிலான நோயாளர்கள் மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவாகியுள்ளனர்.

மற்றவர்களுக்குப் பரவக்கூடிய வகை மற்றும் பரவாத தொற்றாத வகை என தொழுநோயில் இரண்டு வகைகள் உள்ளன.

தொழுநோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள தோல் மருத்துவரை அணுக வேண்டும். தொழுநோய்க்கு மருந்து உண்டு. நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களுக்கு ஆதரவளிக்கவும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

ஆரம்பகால சிகிச்சையானது கடுமையான சிக்கல்களைத் தடுக்கும் மற்றும் பரவுவதைக் குறைக்கும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment