அதிரடியாக கைதான தென் கொரிய ஜனாதிபதி : ஆதரவாளர்கள் 6500 பேர் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 15, 2025

அதிரடியாக கைதான தென் கொரிய ஜனாதிபதி : ஆதரவாளர்கள் 6500 பேர் போராட்டம்

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் இன்று (15) அதிகாலை அவர் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் கடந்த 3ஆம் திகதி கைது செய்ய முற்பட்டபோதும், அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தால் கைது செய்ய முடியவில்லை.

இந்த நிலையில், அவரை கைது செய்யும் 2ஆவது முயற்சியில் இன்று அதிகாலையில் யூன் சுக் இயோலின் வீட்டின்முன் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கூடினர்.

ஆனால், கைது நடவடிக்கை குறித்து முன்னரே அறிந்ததைப்போல, யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் 6500 பேர் ஒன்றுகூடி பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.

மேலும், மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்களே.

இதனைத் தொடர்ந்து, யூன் சுக் இயோலின் சட்டத்தரணியும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எவ்வாறாயினும் தடைகளை மீறி அவர் கைது செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment