அரசாங்கத்துக்கு 5,000 கோடி ரூபா வற் வரி மோசடி - News View

About Us

About Us

Breaking

Sunday, January 5, 2025

அரசாங்கத்துக்கு 5,000 கோடி ரூபா வற் வரி மோசடி

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு 5000 கோடி ரூபா வற் வரியை செலுத்த தவறியுள்ளதாகவும் அதனை தண்டப் பணத்துடன் அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை சுத்திகரிப்பு செய்யப்படாத 3,900 கோடி கிலோ தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் பொதுச் செயலாளர் புத்திக டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அவர் இது தொடர்பில் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டில் மூன்று நபர்களுக்கு சொந்தமான ஆறு நிறுவனங்கள் மூலம் இந்த வரி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பானவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர். 

உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரிக்கு சமமான வரியை, தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் விதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களால் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் காரணமாக நாட்டு மக்களின் சுகாதாரத்திற்கு பல்வேறு பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவர்கள் இவ்வாறு வரி மோசடியை மேற்கொள்வதற்கு அரசியல் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment