கைது செய்யப்பட்ட ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மில்லனிய பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (03) பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நீதவான் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
சந்தேகநபரை ரூ. 5 இலட்சம் கொண்ட சரீரப்பிணையில் விடுவிக்குமாறு, இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.
தேசிய மக்கள் சக்தி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தொடர்பில் அவதூறாக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ரவீந்திர நம்முனி இன்று (03) முற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment