கடந்த 30 வருடங்களுக்கு பின்பு புதிய அரசாங்கத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினூடாக செங்கலடி மாவிலாறு பஸ் வசதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புதிய அரசாங்கத்தினால் (01) நாடளாவிய ரீதியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் எண்ணக்கருக்கமைய வேலைத்திட்டத்தின் ஊடாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் திட்டத்தின் ஒரு கட்டமாக போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக நிரந்தரமான ஒரு போக்குவரத்து வசதி இன்றி மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இவ்விடயம் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து புத்தாண்டில் மட்டக்களப்பு செங்கலடி மாவிலாறு பகுதிக்கு பொதுமக்களுக்கான இந்த போக்குவரத்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இப்பிரதேசத்துக்கு பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை போக்குவரத்துச் சபை பிராந்திய முகாமையாளர், ஏறாவூர் சாலை முகாமையாளர், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய காத்தான்குடி நிருபர்
No comments:
Post a Comment