20% ஆல் குறையும் மின் கட்டணம் : இன்று நள்ளிரவு முதல் நடைமுறை - News View

About Us

About Us

Breaking

Friday, January 17, 2025

20% ஆல் குறையும் மின் கட்டணம் : இன்று நள்ளிரவு முதல் நடைமுறை

இன்று நள்ளிரவு (17) முதல் 6 மாதங்களுக்கான மின் கட்டணத்தை 20% ஆல் குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.

0 - 30 இற்கு இடைப்பட்டதாக இருக்கும் வீட்டுப் பாவனை பிரிவில் காணப்படும் ஒரு மின் அலகுக்கான கட்டணம் ரூ. 6 இலிருந்து ரூ. 4 வரையிலும், 31 - 60 இற்கு இடைப்பட்ட பிரிவில் ஒரு அலகுக்கான கட்டணம் ரூ. 9 - ரூ. 6 வரையிலும் குறைக்கப்படவுள்ளது.

மின்கட்டண குறைப்பு தொடர்பான விபரங்கள் கீழ்வருமாறு,

கட்டண மறுசீரமைப்பு பட்டியல்

0 - 30 அலகுகளுக்கு 29%
31 - 60 அலகுகளுக்கு 28%
61 - 90 அலகுகளுக்கு 19%
91 - 180 அலகுகளுக்கு 18%
180 அலகுகளுக்கு மேல் 19% ஆக குறைக்கப்படவுள்ளது.

வீட்டுப் பாவனை - 20 %
மதஸ்தலங்களில் - 21 %
ஹோட்டல்களில் - 31 %
தொழிற்துறைகளில் - 30 %
அரச நிறுவனங்களில் - 11 %
மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment