பொலிவிழக்கும் ஒலிம்பிக் பதக்கங்கள் : மாற்றித் தருவதாக அதிகாரிகள் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, January 17, 2025

பொலிவிழக்கும் ஒலிம்பிக் பதக்கங்கள் : மாற்றித் தருவதாக அதிகாரிகள் தெரிவிப்பு

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பதக்கங்கள் பொலிவை இழப்பதாக விளையாட்டாளர்கள் சிலர் குறை கூறியுள்ளனர். அவற்றை மாற்றித் தருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரான்ஸில் நாணயங்களை அச்சிடும் மொனாய் டி பாரிஸ் எத்தனை பதக்கங்களைப் புதிதாகச் செய்து தரப் போகிறது என்பதை குறிப்பிடவில்லை.

100 க்கும் அதிகமான பதக்கங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று லா லெட்ரே எனும் உள்நாட்டு ஊடகம் கூறுகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை நடந்தன. போட்டிகளில் மொத்தம் 5,084 பதக்கங்கள் வழங்கப்பட்டன. 

ஓகஸ்ட் மாதத்திலிருந்தே பதக்கங்களை மாற்றித் தரும்படி வீரர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததாக அதிகாரிகள் கூறினர்.

வீரர்கள் சிலர் சமூக ஊடகத்தில் பதக்கங்களின் படங்களைப் பதிவேற்றம் செய்தனர்.

பதக்கங்கள் பொலிவை இழந்திருப்பதையும் சில இடங்களில் சாயம் மறைந்திருப்பதையும் காணமுடிகிறது.

இந்நிலையில் இவ்வாண்டு மார்ச் மாதத்திற்குள் புதிய பதக்கங்களைத் தயார் செய்யவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment