CID இல் முன்னிலையாகாத யோஷித மற்றும் நெவில் - News View

About Us

About Us

Breaking

Monday, December 16, 2024

CID இல் முன்னிலையாகாத யோஷித மற்றும் நெவில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தரான மேஜர் நெவில் வன்னியாராச்சி இன்று (16) ஆகியோரை விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

எவ்வாறாயினும், அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் CID திணைக்களத்தில் முன்னிலையாகி, யோஷித ராஜபக்ச தற்போது வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளதாகவும், நெவில் வன்னியாராச்சி தனிப்பட்ட பயணத்தில் இருப்பதாலும் இன்று வருகை தருவது கடினம் என அறிவித்துள்ளனர்.

பண தூய்தாக்கல் (Money Laundering) தொடர்பான சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காகவே இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment