(இராஜதுரை ஹஷான்)
புதிய சபாநாயகர் பதவிக்கு ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலபத்தி, லக்ஷ்மன் நிபுணராட்சி மற்றும் பிரதி சபாநாயகர் வைத்தியர் மொஹமட் ரிஸ்வி சாலி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கல்வித் தகைமை தொடர்பில் எழுந்த கடும் சர்ச்சையை தொடர்ந்து அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பதவி விலகல் தொடர்பான கடிதத்தை அரசியலமைப்பின் 64 உறுப்புரையின் 2 பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக வெள்ளிக்கிழமை மாலை அனுப்பி வைத்துள்ளார்.
சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய எந்தவொரு பதவி வெற்றிடமானால் அரசியலமைப்பின் 64 உறுப்புரையின் 3 பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற அமர்வின்போது முதல் பணியாக சபாநாயகர் தெரிவு இடம்பெறும்.
சபாநாயகரின் பதவி விலகல் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
இதற்கமைய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) கூடவுள்ள பாராளுமன்ற அமர்வின்போது சபாநாயகர் தெரிவு இடம்பெறவுள்ளது.
பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களை கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி எவ்விதமான போட்டியுமில்லாமல் சபாநாயகரை தெரிவு செய்யும்.
புதிய சபாநாயகர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலபதி, லக்ஷமன் நிபுணராச்சி மற்றும் பிரதி சபாநாயகர் வைத்தியர் மொஹமட் ரிஸ்வி சாலி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
கலாநிதி பட்டம் விவகாரத்தில் எழுந்த கடும் சர்ச்சையை தொடர்ந்து பத்தாவது பாராளுமன்றத்தின் 12 ஆவது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட அசோக்க சபுமல் ரன்வல நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
போலியான கல்வித் தகைமையை குறிப்பிட்டே அசோக சபுமல் ரன்வல கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டார். கம்பஹா மாவட்ட மக்கள் பிரதிநிதியாக தொடர்ந்து பதவி வகிக்க இவருக்கு தார்மீக உரிமை கிடையாது. ஆகவே அசோக சபுமல் ரன்வல பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
No comments:
Post a Comment