நிலுவையிலுள்ள வரிகளை செலுத்த தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, December 15, 2024

நிலுவையிலுள்ள வரிகளை செலுத்த தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான நிலுவையிலுள்ள வரிகளை, எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டுமென உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தக் காலக்கெடுவுக்குள் வரியை செலுத்த தவறும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அபராத நிவாரணத் தொகை பெறத் தகுதியற்றவர்களென உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேக்கர தெரிவித்தார்.

செலுத்தப்படாத சுயமதிப்பீட்டு வரி மற்றும் நிலுவையிலுள்ள வரிகளை வசூலிக்க, திணைக்களம் உள்நாட்டு இறைவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் கள ஆய்வுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

வரி பணத்தை செலுத்தத் தவறியவர்களின் வங்கிக் கணக்குகள் முன்னறிவிப்பின்றி பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment