வெங்காயத்தின் விலை சடுதியாக உயர்வு - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2024

வெங்காயத்தின் விலை சடுதியாக உயர்வு

ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை ரூ. 500 முதல் 550 வரை அதிகரித்துள்ளதாகவும், தேங்காய் ஒன்றின் விலை ரூ. 180 முதல் 230 வரை அதிகரித்துள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தான் பெரிய வெங்காயம் மற்றும் ஏனைய பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 400 முதல் 450 வரை உள்ளதாகவும், வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் இந்திய வெங்காயம் கையிருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோ வெங்காயத்தின் மொத்த விலை ரூ. 400 ஆக உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment