புத்தாண்டிலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்படும் ஜனாதிபதி நிதியம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 30, 2024

புத்தாண்டிலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்படும் ஜனாதிபதி நிதியம்

புத்தாண்டிலிருந்து புதிய இடத்திற்கு ஜனாதிபதி நிதியம்  மாற்றப்படவுள்ளது. 

இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3  ஆவது மாடியில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட உள்ளது.

இதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் புதிய அலுவலக வளாகம் கொழும்பு 01, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டேண்டர்ட் சார்டர்ட் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நிறுவப்படுகிறது.

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் பொதுமக்கள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 முதல், கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தை, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டேண்டர்ட் சார்டர்ட் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள அலுவலக வளாகத்திற்குச் சென்று சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment