2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத காலத்திற்கு இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்த மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, டிசம்பர் 17 தொடக்கம் ஜனவரி 08 வரை பொதுமக்கள் தங்கள் யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை எழுத்து மூலமாகவும், வாய் மொழி மூலமாகவும் முன்வைக்க முடியும்.
இவ்வாறு பொதுக் கலந்தாய்வில் முன்வைக்கப்படுகின்ற யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு நடைமுறைக்கு வரும் மின் கட்டணம் குறித்த இறுதி முடிவு ஜனவரி 17 அன்று அறிவிக்கப்படும் என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
எழுத்துப்பூர்வ கருத்துக்களை info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 076 4271030 என்ற WhatsApp இலக்கத்திற்கு அல்லது தபால் மூலம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பலாம்.
No comments:
Post a Comment