கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக குணநாதன் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 11, 2024

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக குணநாதன் நியமனம்

கிழக்கு மாகாண கல்வி, விளையாட்டு, கலாசார அலுவல்கள், முன்பள்ளி கல்வி, தகவல் தொழில்நுட்பக் கல்வி, இளைஞர் விவகாரம், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், திறன்கள் மற்றும் மனித வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கே.குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று (11) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து நியமிக்கப்பட்டார்.

குறித்த நியமனக் கடிதத்தை கிழக்கு ஆளுனர் வழங்கி வைத்ததுடன் திருகோணமலையில் உள்ள குறித்த அமைச்சில் இன்றைய தினமே தனது கடமையினை பொறுப்பேற்றார்.

இவர் முன்னாள் குச்சவெளி பிரதேச செயலாளர், மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் என பல உயர் பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment