சிறுமியை அடித்து சித்திரவதை செய்த தந்தையின் இரண்டாவது மனைவி கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2024

சிறுமியை அடித்து சித்திரவதை செய்த தந்தையின் இரண்டாவது மனைவி கைது

14 வயது சிறுமியை அடித்து சித்திரவதை செய்து சிறுமியின் முடியை வெட்டி எடுத்ததாக கூறப்படும் சிறுமியின் தந்தையின் இரண்டாவது மனைவி ரிதிமாலியத்த பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் பதுளை - ரிதிமாலியத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் பதுளை - ரிதிமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய பெண் ஆவார்.

இந்த சிறுமியின் தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் தந்தையும், தந்தையின் இரண்டாவது மனைவியும், சிறுமியும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமி பாடசாலை முடிந்து மீண்டும் வீடு திரும்புவதற்கு தாமதமானதால் தந்தையின் இரண்டாவது மனைவி சிறுமியை அடித்து சித்திரவதை செய்து சிறுமியின் முடியை வெட்டி எடுத்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான சிறுமியின் தந்தையின் இரண்டாவது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை ரிதிமாலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment