செல்ஃபி மோகத்தால் பறிபோன இரு உயிர்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 22, 2024

செல்ஃபி மோகத்தால் பறிபோன இரு உயிர்கள்

செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற தாயும், மகளும் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த 18 வயதான மகளும், 37 வயதான தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரத்தினபுரி பிரதேசத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு வந்த இவர்கள், அநுராதபுரம் நிலையத்திற்கு அருகில் காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிவேக ரயிலின் முன் செல்ஃபி புகைப்படம் எடுக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment