பண்டிகை காலங்களின்போது பஸ் உள்ளிட்ட வாகனங்களை சோதனையிடும் வகையில் விசேட போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களை கருத்திற் கொண்டு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பணிப்புரைக்கு அமைய நாளை (23) முதல் பண்டிகைக் காலம் நிறைவடையும் வரை இந்த போக்குவரத்து திட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார்.
இந்த விசேட நடவடிக்கை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் எனவும், 24 மணித்தியாலங்களும் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 119 மற்றும் 1997 ஆகிய குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும் எனவும், போக்குவரத்து விதிகளை மீறுவது தொடர்பான காணொளிகள் இருப்பின் 119 மற்றும் 1997 ஆகிய இலக்கங்களுக்கு தகவல் வழங்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன்,
கொழும்பு மாநகர போக்குவரத்து பிரிவு
0718591741
போக்குவரத்து தலைமையக பணிப்பாளர்
0718591967
மேல் மாகாண வடக்கு போக்குவரத்து பிரிவு பணிப்பாளர்
0718592857
மேல் மாகாண பணிப்பாளர் தெற்கு போக்குவரத்து பிரிவு
0718592278
என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்கமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment