சிரியாவின் புதிய இடைக்கால பிரதமராக மொஹமட் அல் பஷீர் பெயரிடப்பட்டுள்ளார்.
ஆட்சி கவிழ்க்கப்பட்ட பஷார் அல் அரசாங்கத்தின் ஆட்சியில் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பகுதியொன்றின் ஆளுநராக குறித்த இடைக்கால பிரதமர் இதற்கு முன்னர் செயற்பட்டிருந்தார்.
இதன்படி, அவர் அடுத்த வருடம் மார்ச் மாதம் 01ஆம் திகதி வரை பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 08ஆம் திகதி சிரியாவின் ஜனாதிபதியாக இருந்த, பஷார் அல் அசாத் தனது பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறினார்.
அத்துடன், அவர் தற்போது ரஷ்யாவில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைக்கு மத்தியில் மொஹமட் அல் பஷீர் இடைக்கால பிரதமராக நியமனம் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment